செய்திகள்

5 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு சேவையின் தேவை கருதி, நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. எல். ஆர். விதாரண – எம்பிலிபிட்டிய பொலிஸ் தலைமையகத்திலிருந்து கல்கிஸை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஆர்.ஜே. டயஸ்- குட்டிகல பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்தவர் எம்பிலிபிட்டிய பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜே.டி. சேனாரத்ன- கட்டான பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்தவர் கட்டான பொலிஸ் பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.பி.டபிள்யூ. அலககோன்- பொலிஸ் படையணி தலைமையகத்திலிருந்து குட்டிகல பொலிஸ் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.

பொலிஸ் பரிசோதகர் ஆர்.கே.சி.டபிள்யூ. ரத்னாயக்க – சீகிரிய பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்தவர் சீகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.