செய்திகள்

5 முறை பதவி வகித்த நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் காலமானார்

நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சூர்ய பஹதூர் தாப்பா காலமானார்.

நேபாள நாட்டில் 5 முறை பிரதமராக பதவி வகித்தவர் சூர்ய பகதூர் தாபா. இவர், புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் 29-ம் தேதி புதுதில்லி அருகே உள்ள கூர்கானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சூர்ய பகதூர் தாபா வியாழக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 87. இதையடுத்து அவரி்ன் உடல் விமானம் மூலம் நேபாள நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. சூர்ய பகதூர் தாபாவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.