செய்திகள்

5 வருடங்களில் தனிநபர் வருமானம் 6,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்படும் : ஜனாதிபதி

எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டில் தனி நபர் வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான முதலீடுகள், தொழிநுட்பங்கள் உள்ளிட்ட அணைத்து துறைகளிலும் விரிவான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று தெஹியோவிட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
” நாட்டின் பொருளாதாரம் என்பது அந்த நாட்டு மக்களின் வருமானம் , தேசிய பொருளாதார நிலைமை மற்றும் அந்நிய நாட்டு செலாவணி என்பவற்றின் அடிப்படையிலேயே காணப்படுகின்றது. எனவே எதிர்வரும் 5 வருடங்களுக்குள் தனிநபர் வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க உத்தேசித்துள்ளோம். இதனை அடைய எமது முதலீடுகள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி போன்ற துறைகள் மேலும் வலுவடைய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.