செய்திகள்

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற இலங்கை சீனாவுடன் ஒப்பந்தம்

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கா இலங்கை சீனாவுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் குறித்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கடன் தொகை இந்த வாரத்தினுள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. -(3)