செய்திகள்

8 ஆம் திகதி நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்படுமா? கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தபின்னர் எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்திகளால் கொழும்பு அரசியலில் பரபரப்பான நிலை காணப்படுகின்றது. இது தொடர்பில் எதிர்க்கட்சியினரும், அரச தப்பினரும் முரண்பாடான தகவல்களை வெளியிட்டுவருகின்றார்கள்.

தனது பதவி பறிபோகப்போகின்றது என்ற அச்சத்தில் மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த அன்றைய தினமே பாராளுமன்றத்தைக் கலைத்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இல்லாமல் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்திருக்கின்றார்.

அதேவேளையில், 8 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்ற செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் டல்ளஸ் அழகப்பெரும, பாராளுமன்றத்தைக் கலைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை. இது எதிரணியினரால் பரப்பப்படும் ஒரு வதந்தி எனக் குறிப்பிட்டார்.