செய்திகள்

9ம் திகதி நடக்கவிருந்த மஹிந்தவின் அனுராதபுர கூட்டம் இரத்து

மஹிந்த தரப்பினரால் எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பொதுக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மஹிந்தவுடன்  எழுவோம்” என்ற தொனிப்பொருளில்  குறித்த கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் மஹிந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அந்த மேடையில் ஏற்ற திட்டமிடப்பட்டமையினால் வேட்பு மனு வழங்கப்படும் வரை அந்த கூட்டத்தை நடத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் நடத்தப்பட்டு வரும் கூட்டத்தின் ஓர் அங்கமாக குறித்த கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மஹிந்தவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டமாக அதனை நடத்த அவர்கள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.