செய்திகள்

Computer Game பிரியர்களுக்கு CD Projekt Red நிறுவனத்தின் புதிய தயாரிப்பு

விதம் விதமான Computer Game களை தயாரிக்கும் நிறுவனமான CD Projekt Red நிறுவனம், நேற்றைய தினம் தனது புதிய Computer Game தயாரிப்பு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டிருக்கின்றது.கணிணி விளையாட்டுக்களை பெரிதும் விரும்பும் ஆர்வலர்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்த Witcher 3 Wild Hunt என்ற Computer Game இனை 2015இன் பெப்ரவரி 24ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக இந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.அதன் பின்னர் பெப்ரவரி 25ம் திகதி தொடக்கம் 16 Update களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.