செய்திகள்

அரசியல் தீ, விரலை விட்டு சுட்டுக் கொண்ட பிறகுதான் ரஜினி, கமலுக்கு தெரியும்- பாரதிராஜா

தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னும் அதனை மேலும் தூண்டி விடுவது நல்லது அல்ல. ஆண்டாள் தலத்துக்கே சென்று ஆண்டாளை அவமதிக்கும் வகையில் வைரமுத்து எப்படி பேசியிருக்க முடியும்?.
ஜீயர் சோடா பாட்டில் வீசுவேன் என்றும், கல் எறிவேன் என்றும் பேசியுள்ளார். இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ? இது ஒரு மடாதிபதி பேசுகின்ற பேச்சா? இதனையும் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.
திரை உலகை பொறுத்த வரையில் உணர்வு உள்ளவர்கள் வைரமுத்து விஷயத்தில் குரல் கொடுக்கின்றனர். உணர்ச்சி இல்லாதவர்கள் அடங்கி கிடக்கின்றனர். நடிகர் ரஜினி, கமல் ஆகியோருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வைரமுத்து பாடல்கள் எழுதி கொடுத்துள்ளர்.
ஆனால் அவர்கள் ஆண்டாள் விவகாரத்தில் தற்போது வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் ஒரு கருத்தை கூட பதிவு செய்யவில்லை. அரசியலுக்கு வருவோம் என்கிறீர்கள். அது பற்றி ஒரு வார்த்தை சொல்ல முடியாதா?.
ரஜினி, கமல் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அரசியலை தீ என்று சொல்கிறோம். தீயில் விரலை விட்டு சுட்டுக் கொண்ட பிறகுதான் அது அவர்களுக்கு தெரிய வரும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது. இது தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்
அவர் தியானத்தில் இருந்தார் என்றால் எதற்காக அந்த சமயத்தில் நிகழ்ச்சியை தொடங்கினீர்கள்? தமிழர்களையும், தமிழையும் அவமதிப்பதே மடாதிபதிகளின் வழக்கமாக உள்ளது. இந்த செயலுக்கு காரைக்குடியில் உள்ள தமிழன்னை சிலை முன்பு விஜயயேந்திரர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தலித் என்பதால்தான் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது என்று வெளியான செய்தி பற்றிய கேள்விக்கு பாரதிராஜா அளித்த பதில் வருமாறு,இளையராஜா அய்யர் போல் ஆக விரும்புகிறார். நாம் எந்த மண்ணில் பிறந்தோம் என்பதுதான் பெருமை. என்னை அடையாளம் படுத்துவது என் மண். அடையாளப்படுத்துவது என் மொழி. அடயாளப் படுத்துவது என் ஊர். மூலத்தை மறந்து விட்டு புதிதாக வேஷம் போட்டாலே தப்பு. அதனை மறந்ததால்தான் இளையராஜாவுக்கு இந்த அவமானம். இவ்வாறு பாரதிராஜா பதில் அளித்தார்.(15)39010