சமர் அல்லாச் சமர்களாக ஒருங்கிய சமர் முறைகளும் (Hybrid Warfare) ஒருங்கிய அச்சுறுத்தல்களும் (Hybrid Threats)
நவீன உலக ஒழுங்கில் சத்தமில்லா யுத்தமாக இராணுவ அணிகலன் அற்ற சமர் அணுகுமுறைகள் செயற்படுகின்றன. இவை இரண்டு வகைகளில் நிகழ்கின்றது. முதலாவது ஒருங்கிய சமர் முறைகள் (Hybrid Warfare). இரண்டாவது ஒருங்கிய அச்சுறுத்தல்கள் ( Hybrid Threats). இராணுவ ஆயுதங்களுக்கு அப்பால் ஏனைய வழிமுறைகள் பிரயோகிக்கப்பட்டு ஒரு நாட்டினை அல்லது ஒரு பிரதேசத்தினை கட்டுப்படுத்தலில் ஒருங்கிய சமர் முறைகளும் ஒருங்கிய அச்சுறுத்தல்களும் கையாளப்படுகின்றன. இதனால் உலகின் ஆயுத மோதல்கள் சிக்கல்கள் நிறைந்ததாகவும், சவால்கள் மிகுந்ததாகவும் பரிணமித்துள்ளன.
இவை தொடர்பான வரையறையினை அமெரிக்கக் கடற்படைத்தளபதி லெப். ஜெனரல் ஜேம்ஸ் மத்திஸ் 2005ம் ஆண்டு விபரித்துள்ளார். மத்தியகிழக்கில் ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு எதிராக ஒருங்கிய சமர் முறையையே அல்கைடா, ஹிஸ்புல்லா போன்ற அமைப்புக்கள் கையாள்வது தெளிவாகி உள்ளது. அவ்வாறே இஸ்ரேலுக்கு எதிராக ஈரானும், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் இத்தகைய ஒருங்கிய சமர்த்தந்திரங்களை பிரயோகிக்கின்றன. ரஸ்சியா கிரிமியாவில் இத்தகைய ஒருங்கிய சமர் முறைகளையும் ஒருங்கிய அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்கும், இவை பயன்படுத்தப்பட்டமை வன்முறையல்லா. சீனாவின் இந்துசமுத்திர ஆதிக்கமும் இத்தகையதே ஆகும். ஒருங்கிய அச்சுறுத்தல் உபகரணங்கள் :
(1) கலாசாரரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(2) இராஜதந்திரரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(3) வலையமைப்புரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(4) புலனாய்வுரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(5) உளவியல்ரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(6) தொழில்நுட்பரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(7) சட்டவிரோத கடத்தல்ரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(8) போதைவஸ்துரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(9) புனைவு மற்றும் கற்பனாவாதரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(10) நிதிரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(11) வர்த்தகரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(12) வளரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(13) பொருளாதாரம் ஃ பொருளாதார உதவிரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(14) சட்டம் சமுதாய வழமை ஒழுங்குரீதியான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(15) வர்த்தகப் பொருளாதாரத் தடைகள் மூலமான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(16) தகவல் சாதனம் மூலமான பிரச்சார மூலமான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(17) இலட்சியக் கோட்பாடு, மதவாதம் மூலமான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(18) வலிந்த இடப்பெயர்வு, புலம்பெயர்வு மூலமான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(19) மறைமுக நடவடிக்கைகளாலான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(20) முறைசாரா சமர்முறையிலான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(21) போலிச்சமர் முறையிலான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(22) அன்றாட நுகர்வு வலையமைப்பு மூலமான ஒருங்கிய அச்சுறுத்தல்.
(23) விரகியல் நிர்ப்பந்தங்கள் மூலமான ஒருங்கிய அச்சுறுத்தல்கள்.
வன்முறையல்லா ஒருங்கிய அச்சுறுத்தல்கள் ர்லடிசனை வுhசநயவ குறித்த ஆழமான விழிப்பு ஈழத்தமிழர்களுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் மிகவும் இன்றியமையாதவையாகும். 2009ம் ஆண்டிற்குப் பின்பான தமிழர்களின் அரசியல் வாழ்வியலில் பல்வேறு சர்வதேசம் சார்பானதாகவும், இலங்கை அரசு சார்பானதாகவும், இந்திய அரசு சார்பானதாகவும், சீனா சார்பானதாகவும் ஒருங்கிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளன.
இவற்றில் சில பௌத்த கலாச்சார மேலாதிக்கம், சீனா முதலீட்டு மேலாதிக்கம், சட்டரீதியான பின்னடைவு என்பனவற்றைக் குறிப்பிடலாம். ஆட்கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், மணல் வர்த்தகம், மர வர்த்தகம் என்பனவும் ஒருங்கிய அச்சுறுத்தல்களாக நோக்கப்பட வேண்டியவை ஆகும். தமிழ்ப்பகுதிகளில் அமைக்கப்படும் பௌத்த விகாரைகள், குடியேற்ற நகரங்கள், சிங்கள அதிகாரிகளின் நியமனங்கள், சிங்கள விசுவாசிகளின் நியமனங்கள், ஒருங்கிய அச்சுறுத்தல் ஆகும். அடுத்து கொரோனாத் தடுப்பு தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தினை நிலைநாட்டும் ஒருங்கிய அச்சுறுத்தல் செயற்பாடாகவே நிகழ்கின்றது. தடுப்பு மருந்து ஏற்றல், தனிமைப்படுத்தல் சட்டப் பிரயோகம் என்பன தமிழர் மீதான ஒருங்கிய அச்சுறுத்தல்களாகவே அமைந்துள்ளன.
உலக ஒழுங்கில் வல்லரசுகள் சார்பானதும், அதனை எதிர்க்கும் அரசுகளினது அமைப்புக்களின் சார்பானதுமான ஒருங்கிய சமர்முனைகள் பல. அவையாவன :
(1) முறைசார் சமர்முனை
(2) ஒழுங்கற்ற சமர்முனை
(3) பயங்கரவாதங்கள்
(4) பாரிய அளவிலான குற்றச் செயல்கள்
(5) தகவல் தொடர்பு சமர்முனை
(6) அணுக்கருச்சக்திச் சமர்முனை
(7) உயிரியலாயுதம், இரசாயன ஆயுதச் சமர்முனை
(8) சூழலியல் சமர்முனை
(9) விண்வெளிச் சமர்முனை
(10) மின்னணுச் சமர்முனை (Electronic Warfare)
(11) மொத்தல் சமர்முனை (Concussion Warfare)
(12) வலையமைப்புச் சமர்முனை
(13) புலனாய்வுச் சமர்முனை
(14) கணனி வலைத்தொடர்புச் சமர்முனை (Cyber Warfare)
(15) நகரக் கட்டமைப்புச் சமர்முனை (Urban Warfare)
(16) ஆள் அரவு அற்ற சமர்முனை (Unmanned Warfare)
ஒருங்கிய சமர்முனைகள் உலக வல்லரசுகளின் ஆதிக்கத்தை மாற்றி அமைக்கின்றன. உலக அரசியல் பொருளாதாரத்தை சிக்கல்மிக்கதாக ஆட்டம்காண வைக்கின்றன. பல பரிமாணங்களில் தொழில்நுட்ப செறிவுகளின் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இவை ஐக்கிய அமெரிக்கா, ரஸ்சியா, சீனா போன்ற வல்லரசுகளை மட்டுமல்லாது பிராந்திய வல்லரசுகளையும் நிலைபேறான சமநிலைக்கு அப்பால் இட்டுச் சென்றுள்ளன. இந்நிலையில் ஈழத்தமிழர்களும் தமக்கு எதிராக ஒள்ள ஒருங்கிய அச்சுறுத்தல்களையும், ஒருங்கிய சமர் முனைகளையும் எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ளல் வேண்டும்.
சிவா செல்லையா




