சரவணன் மீனாட்சி தொடர் பற்றி 10 சுவாரஸ்ய விஷயங்கள்
சரவணன் மீனாட்சி தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான சீரியல். இந்த தொடர் மீது எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் இன்றும் ரசித்து பலராலும் பார்க்கப்படுவதால் தான் மூன்றாம் பாகம் வரை வந்துள்ளது, இந்த சீரியலின் சுவாரசியமான 10 தகவல்கள் இதோ…
சரவணன் மீனாட்சி தொடர் 2011ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி தொடங்கப்பட்டது.

2007ல் விஜய் டிவியில் மதுரை என்ற தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜாவின் பெயர் சரவணன், மீனாட்சி. இந்த பெயர் பிரபலமாகவே அடுத்த வந்த தொடருக்கு சரவணன் மீனாட்சி என்று பெயர் வந்தது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சீரியல்களில் 1000 எபிசோடை எட்டியது இந்த தொடரே.
தற்போதைய சரவணன் மீனாட்சி தொடரை இயக்குபவருக்கு 30 வயது.

தற்போது சீரியலில் தமிழ் என்ற பெயரில் நடித்திருப்பவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த சீரியலின் இசையமைப்பை செய்தவர் இளையவன்.

முதல் பாகம் 2014ல் முடிந்தது, அதனை தொடர்ந்தே இரண்டாம் பாகம் ஆரம்பமானது.
இரண்டாம் பாகத்தை சேர்த்து 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி 1000வது எபிசோடை எட்டியது.

43rd annual awards function என்ற விருது நிகழ்ச்சியில் Best Serial’, ‘Best Male Actor’, ‘Best Female Actor’, ‘Best Director’ and ‘Best Character Actor போன்ற விருதுகளை பெற்றது இந்த சீரியல்.

இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் சாய் பிரமோதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சாய் பிரமோதிதா விஜய் டிவி நடன போட்டியில் கலந்து கொண்டு பிரபலமானவர்.




