செய்திகள்

நெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )

மனது முழுவதும் சாதனைகளின் வேட்கையுடன் வியாபித்திருப்பவனுக்கு நிராகரிப்பின் வலி ரணமானதொன்று. நிராகரிப்பின் வலி தாங்கமுடியாமல் 99 வீதமானவர்கள் தமது சாதனைகளை மனதினுள்ளேயே கருக்கலைப்பு செய்துகொள்கின்றார்கள். மாறாக மற்றய 1 வீதமானவர்களே ரணங்களை துடைத்துக்கொண்டே முன்னேறி விண்ணில் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றார்கள்.

ஒருவன் சாதனை செய்வதற்கு கால தேச வர்த்தமானங்கள் பெரும் தடைகளாக இருப்பதாகவே ஆரம்பத்தில் தோன்றினாலும், அவன் யார் என்று காட்டுவதற்கும் மற்றவர்களுக்கும் இவனுக்கும் இடையலான வித்தியாசங்களை கோடிடவுமே காலம் ஒருவனை கொழுத்துகின்றது, புடம்போடுகின்றது மினுக்குகின்றது, இறுதியில் ஜொலிக்க வைக்கின்றது என்பதே உண்மையான ஒன்று.

தான் யார் என்பதிலும் தான் சென்றடையும் பாதை எதுவென்பதிலும் தெளிவாக உள்ளவன், ஆரம்பகாலங்களில் மற்றவர்களால் வரும் ஏளனங்களையும், அவமானங்களுக்கும் செவிகொடுப்பதில்லை. மாறாக தனது இலட்சியம் நோக்கிய பாய்ச்சலை இன்னும் விசாலப்படுத்துகின்றான். தொடர்ந்தும் தேடித்தேடி கற்றுக்கொள்கின்றான், தனக்கு வழிகாட்டுபவர்களை கண்டுகொள்கின்றான், தனது சந்தேகங்களை தீர்த்துக்கொள்கின்றான். இலட்சியக்கழைப்பில் அந்த வழிகாட்டும் குருமார்களின் நிழல்களில் இளைப்பாறிக்கொள்கின்றான். மீண்டும் பறக்கின்றான்.

ant
இலட்சியங்கள் ஒருசிலரால் மட்டுமே அடையப்படுகின்றதே! அவர்கள் பிறக்கும்போதே அபார அறிவுடனும், திறனுடனும், நிரம்பி வழியும் மனப்பாங்குடனுமா பிறக்கின்றார்கள்?? என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் தொக்கி நிற்கும் மில்லியன் டொலர் கேள்விகளில் ஒன்று. உண்மையில் பிறப்பிலேயே இவை ஒருவருக்கு வருகின்றதா என்ன? இலட்சியங்கள் பெரிதாக இருப்பவர்கள் எவருக்குமே ஆரம்பகாலத்தில் அந்த அளவுக்கான அறிவோ, திறனோ அல்லது மனப்பாங்கோ இருப்பதில்லை. அவர்கள் தமது இலட்சியம் நோக்கிய பயணத்தில் முன்றே முன்னேறவே அவையும் வியாபித்துச்செல்கின்றன என்பதே உண்மை.

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு கார் இருக்கின்றது, சுமார் 1000 கிலோ மீற்றர் தூரம் நீங்கள் உங்கள் இருப்பிடத்தில் இருந்து தள்ளி நிற்கின்றீர்கள். இரவு ஆகிவிட்டது. மறுநாள் காலை உங்கள் இருப்பிடத்தை அடைந்தே தீரவேண்டிய நிலை. பரிதாபம் என்ன வென்றால் நாடளாவிய ரீதியில் மின்சாரத்தடை எங்கும் மின்சாரம் இல்லை. ஐயோ 1000 கிலோ மீற்றரை வெளிச்சமின்றி எப்படி அடைவேன் என்று சிந்திப்பவர்கள் அங்கேயே உறங்கத்தொடங்குகின்றனர்.

மாறாக காரில் ஹெட் லைட் உண்டு அது சுமார் 20 அடி தூரத்திற்குத்தான் வழிகாட்டும். ஆனால் பயணம் ஆரம்பித்துவிட்டால் அதுவும் முன்னோக்கி நகர்ந்துகொண்டே வெறும் 20 அடி தூரம் காட்டும் வெளிச்சத்தில் 1000 கிலோ மீற்றர் தூரத்தில’ உள்ள இருப்பிடத்தை அடைந்துவிடுகின்றனர் சாதனையாளர்கள். அதுபோலதான் இலட்சியங்கள் எமது சக்திக்கும் அப்பாற்பட்டதாகவேண்டுமானாலும் இருக்கலாம். அதை அடைவதற்கான எதுவும் இப்போது உங்களுக்கு போதாமையாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்கள் பயணங்கள் தொடங்கியவுடனேயே நீங்கள் முன்னேற முன்னேற அவைகளும் வரிவடைந்து உங்களுக்கு வழிகாட்டும் என்பதே உண்மை.

நான் வெற்றியாளன் நான் சாதனையாளன் என்று ஒருவன் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்துவிட்டாலே நிச்சயம் அவன் வெற்றியாளனாகவும், சாதனையாளனாகவும், மாறிவிடுகின்றான் என்பதே இந்த உலகின் இரகசியம் என்றால் மிகையாகாது.

Tell-Yourself-I-Think-I-Can-To-Boost-Productivity

வெற்றியாளர்கள் எப்போதுமே தங்களை நன்கு உணர்ந்தவர்காளகவே இருப்பார்கள். அதனாலேயே அரம்பகாலத்தில் அவர்கள் பிறரால் உதாசீனப்படுத்தப்பட்டாலும், அல்லது அமுக்கப்பட்டாலும், அமுங்கிப்போய்விடமாட்டார்கள். மீறிக்கொண்டு மேலேவரவே முயல்வார்கள்.

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, இந்திய திரை உலகிலேயே மிகச்சிறந்த நடிகராக போற்றப்படுபவர் கமல் ஹாசன் அவர்கள். அவர் தனது 5 ஆவது வயதிலே களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தேசிய விருதினையும் பெற்றிருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றபோது குழந்தை நட்சத்திரமாகவே அடுத்தடுத்து வாய்ப்புக்கள் அவருக்கு வந்து குவிந்தன. இதனால் சிறுவயதிலேயே பாடசாலைக்கு ஒழுங்காசக் செல்லமுடியாத நிலைக்கு ஆளாகி பெரியவர்களுக்கு நிகராக பொருளீட்டும் நிலைக்கு உயர்ந்தார்.

2
சற்று வளர்ந்து விடலைப்பருவ நிலைக்கு அவர் வந்தபோது சொல்லிக்கொள்ளும் படியான வாய்ப்புக்கள் அவருக்கு இல்லை. மறுபக்கம் குழந்தை நட்நத்திரமாகவும், நடிக்கமுடியாமல், கதானாயகனாகவும் நடிக்கும் வயதையும் எட்டாமல் இந்தக்காலங்களில் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்.
ஆனால் அந்தப்பொழுதுகளை அவர் வீணாக்கவில்லை. நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். எல்லாவகை நடனங்களையும் கற்றுத்தேர்ந்தார். பின்னர் நடன இயக்குனர் தங்கப்பனிடம் உதவியாளராக பணிபுரிந்தார். அளவிலடங்காத புத்தகங்களை அவர் வாசித்து தனது அறிவை விரிவு செய்து, பகுத்தறிவுச்சிந்தனையில் அவர் ஊறிய காலங்கள் அவை. கமரா நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து இயக்குனர் நுட்பங்களையும் கற்றுக்கொண்டார்.

அடுத்து கதாநாயகனாக நடிக்கவேண்டும் தனது முயற்சிகளை தொடங்கினார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. பல இடங்களில் மணிக்கணக்காக, நாட்கணக்காக காத்திருந்தார். பல இடங்களில் ஏமாற்றப்பட்டார் என்றுதான் கூறவேண்டும்.

அந்த வேளையில் ‘குறத்தி மகன்’ என்ற படத்தின் கதாநாயகனுக்கான நடிகர் தேர்வு இடம் பெற்றது. அந்த திரைப்படத்தை இயக்கியவர் அன்றைய நாட்களின் முன்னணி இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் அவர்கள். படத்தில் கதாநாயகனாக கமல் ஹாசனுக்கே வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் விரும்பினார். ஆனால் இயக்குனர் அதற்கு உடன் படாமல் கமல் ஹாசனை நிராகரித்தார். தான் ஏற்கனவே ஸ்ரீதர் என்ற நடிகரை தெரிவு செய்துவிட்டதாகவும் ஸ்ரீதர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் நடிகர் ஆவார் என்றும் கமல் ஹாசன் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் வேண்டுமானால் கமல் ஹாசன் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கமுடியும் என்றும் கமல்ஹாசன் முன்னாலேயே நேரடியாகவே கூறியருந்தார்.

இந்த நிலையில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையில் பெரும் வாக்குவாதமே இடம்பெற்றது. இறுதியில் இயக்குனர் தயாரிப்பாளரான நீங்கள் கேட்டுக்கொண்டதால் வேண்டுமானால் கமலுக்கு ஒரு சிறு பாத்திரம் கதாநாயகனின் சகோதரனாக நடிக்கும் வாயப்பை கொடுப்பதாக தெரிவித்திருந்தார். தயாரிப்பாளரும் அதை ஏற்றுக்கொண்டிருந்தார்.

கதாநாயகன் என்ற வாய்ப்பு தன் எதிர்காலத்தையும் வாழ்க்கையினையும் நிர்ணயிக்கும் விடயம். அது பறிபோகப்போகின்றது. கமல் ஹாசன் மனம் துடியாய் துடித்தது. அந்த வாய்ப்பை தனக்கே ஏற்படுத்த வேண்டும் என்று துடியாய் துடித்தார். இயக்குனரிடம் எவ்வளவோ பேசிப்பார்த்தார். ஆனால் மேலும் மேலும் அவமானமே அன்றி வேறு எதுவும் அவருக்கு கிடைத்துவிடவில்லை.

வேறு வழியின்றி கதாநாயகனின் அண்ணன் வேடத்தில் நடித்தார். பாரிதாபமாக நடிகர் கூட்டத்தில் ஒருவராக திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் தோன்றுவார். ஒரு கட்டத்தில் கதாநாயகனை துதித்து வாழ்த்தும் விதமாக ‘ராஜா வாழ்க! ராஜா வாழ்க!! என்று பரிதாபமாக குரல் கொடுக்கும் காட்சியிலும் நடித்தார்.

அவர் மனதிற்குள் ஒரு வைராக்கியம் குடிகொண்டிருந்தது. விரைவில் மகிப்பெரிய நடிகனாக வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையினை மட்டும் அவர் இத்தனை அவமானங்களை சந்தித்தபோதும் கைவிடவில்லை. தன்னை உதாசீனப்படுத்தியவர்களின் முன்னால் தான் யார் என்று காட்டும் காலம் வரும் என்பதுமட்டும் அவர் மனிதில் உறுதியாக பதிந்துகொண்டது.

Kamal Haasan is meeting press in his office reg the Hindu Makkal Katchi's complaint to ban Bigg Boss program in Vijay TV

இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் கே. பாலச்சந்தர் பார்வையில் பட்டார். அவரும் முதலில் இவருக்கு சிறு சிறு வாய்ப்புக்களே கொடுத்தார். பின்னர் இவருக்கு கதாநாயகன் வாய்ப்பை கொடுத்து அழகுபார்த்தார். நான்கே வருடத்தில் தமிழகத்தின் அப்போதையே இளைய சமுதாயத்தின் காதல் இளவரசனானார் கமல் ஹாசன். தொடர்ந்து வெற்றிப்படங்கள் குவிந்தன. இயக்குனர்களும், தயார்பிபாளர்களும், அவரது கால்சீட்டீக்காக வீட்டு வாசலில் தவம் கிடந்தனர். அந்த வரிசையில் முதல் கமல் ஹாசனை நிராகரித்த கோபால கிருஷ்ணனும் நின்றார். அவர் அறிமுகப்படுத்திய ஸ்ரீதரோ காணாமற்போயிருந்தார். கமலிடம் தான் அடுத்து இயக்கவுள்ள படத்தில் நீங்கள் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்று தயக்கத்துடன் கேட்டுக்கொண்டார். கமல் எந்தக்கோபமும் அவருடன் படவில்லை, முகமலர்ச்சியுடனேயே பேசினார். உண்மையில் அடுத்த ஐந்துவருடத்திற்கு கால்சீட் அவரிடம் இருக்கவில்லை என்பதே கமல் அவரது வேண்டுகோளை ஏற்காமைக்குரிய காரணமாக இருந்தது.

தான் யார் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தார் கமல் அதனாலேயே ஆரம்பத்தில் தான் யார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.