செய்திகள்

புலியுடன் மோதும் பாயும் புலி

விஜய் புலி என்று தன் படத்தின் தலைப்பை அறிவித்த சில தினங்களில், விஷால் தன் படத்துக்கு பாயும் புலி என்ற தலைப்பை அறிவித்துள்ளார்.

புலி படத்தின் இசையினை ஓகஸ்டில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதே திகதியில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள பாயும் புலி படத்தின் இசை வெளியாகிறது.

பாயும் புலி படம் தொடங்கும்போதே செப்டம்பர் மாதம் வெளியிடப் போவதாக விஷால் அறிவித்துள்ளார். விஜய் படமும் இதே செப்டம்பரில்தான் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.