செய்திகள்

“ஸ்ரீதேவியை சந்தித்தது, எனக்கு மலரும் நினைவுகள்” கமல்ஹாசன் நெகிழ்ச்சி

கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் 1970 மற்றும் 80-களில் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இணைந்து நடித்த முதல் படம் ‘மூன்று முடிச்சு’. அதன்பிறகு 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை என்று இவர்கள் ஜோடியாக நடித்த படங்கள் அனைத்தும் வசூல் அள்ளின. இந்தியில் ‘சத்மா’ என்ற பெயரில் மூன்றாம் பிறை வெளியாகி அங்கும் பரபரப்பாக ஓடியது.
பின்னர் ஸ்ரீதேவிக்கு இந்தியில் படங்கள் குவிந்ததால் நடிகர் அனில்கபூரின் சகோதரரும், தயாரிப்பாளருமான போனி கபூரை மணந்து மும்பையிலேயே குடியேறி விட்டார். இதனால் அவர்கள் அதிகம் சந்தித்துக் கொள்ளவில்லை. நீண்ட காலத்துக்கு பிறகு மும்பையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றுக்கு கமல்ஹாசனை அழைத்து இருந்தனர். ஸ்ரீதேவியும், கணவர் போனிகபூருடன் சென்று இருந்தார்.
விழாக்குழுவினர் ஸ்ரீதேவியை மேடைக்கு அழைத்து கமல்ஹாசனுக்கு அவரது கையால் விருது கொடுக்க வைத்தனர். அப்போது இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவில் கமல்ஹாசன் பேசும்போது, “ஸ்ரீதேவி கையால் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை பார்த்ததும் நான் பழைய மலரும் நினைவுகளுக்குள் சென்றேன்” என்றார். கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். (15)201801271259338453_KamalHaasan-happy-after-met-sridevi_SECVPF