செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் வழங்குமாறு நித்தியானந்தா கடிதம் ஊடாக கோரிக்கை

தனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும் உதவிசெய்யும் பட்சத்தில் எங்கள் நன்றியின் வெளிப்படாக லட்சக்கணக்கான டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை உங்கள் நாட்டுக்கே, மக்களின் நலனுக்காகவே தந்து விடுகிறோம் என இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதில் சொர்க்கத்தில் வாழ்வது போல் வாழ்ந்து வருவதாக அறிவித்திருந்தார்.இவ்வாறான நிலைமையில் இலங்கையில் மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் கோரியுள்ளார். அத்துடன் சிகிச்சைக்கான முழு செலவையும் தனது சொர்க்கபூமியான கைலாசா ஏற்றுக்கொள்ளும் எனவும் நித்தியானந்த தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

நித்தியானந்தாவுக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருத்துவ சாதனங்களை கைலாசா அரசு கொள்முதல் செய்யும்.எங்கள் நன்றியின் வெளிப்படாக லட்சக்கணக்கான டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை உங்கள் நாட்டுக்கே, மக்களின் நலனுக்காகவே தந்து விடுகிறோம். நித்தியானந்தாவுக்கு அரசியல் புகலிடம் வழங்கிவிட்டால், இலங்கையில் தேவையான முதலீட்டையும் நித்தியானந்தா வழங்குவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)